மரக்கன்றுகள் இலவசமாக பெற வேளாண் துறை அழைப்பு
கம்பம்; வேளாண் துறை மூலம் விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி தோட்டங்களில் சுற்றிலும் மரங்களை நடவு செய்து வளர்க்க திட்டம் தயாரிக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக இத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
இந்த நிதியாண்டிக்கு தேனி மாவட்டத்திற்கு 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வட்டாரத்திற்கும் 6250 மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் தேக்கு, மகாகனி, செம்மரம் உள்ளிட்ட மரக்கன்றுகள் அனுமதிக்கப்பட்டுள்ளது. இவை இலவசமாக வழங்கப்படும். விரும்பும் விவசாயிகள் கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் உள்ளிட்ட வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ள வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.