தேசிய பயிற்சி முகாமில் 32 தேனி மாணவர்கள்
தேனி; திருச்சி மாவட்டத்தில் நாளை துவங்கும் தேசிய அளவிலான சாரணியர் பயிற்சி முகாமில் தேனி மாவட்டத்தை சேர்ந்த 32 மாணவர்கள், 4 ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். சாரணர் இயக்கம் சார்பில் ஆண்டுதோறும் தேசிய அளவிலான பயிற்சி முகாம் வெவ்வேறு மாநிலங்களில் நடத்தப்படுகிறது.
இந்தாண்டு திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பிப்.3வரை பயிற்சி முகாம் நடக்கிறது. முகாமில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் 25 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர்.
முகாமில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதில் பங்கேற்க தேனி மாவட்டத்தில் இருந்து தலா 16 மாணவர்கள், மாணவிகள் என 32 பேர் தேர்வாகி உள்ளனர். இவர்களை அழைத்து செல்ல 4 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.