போட்டி தேர்வர்களுக்கு இட நெருக்கடி ஐ.டி.ஐ. ,யில் இடம் வழங்க வலியுறுத்தல்
தேனி: மாவட்ட வேலை வாய்ப்பு – தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் குருப் 4, குருப் 2 தேர்வுக்கான பயிற்சி நடந்து வருகின்றன. இங்கு பயிற்சி அரங்கம், வேலை வாய்ப்பு அலுவலர் அறை, அலுவலர்களுக்கான அறைகள் மட்டுமே உள்ளது. பூங்கா வளாகத்தில் போட்டித்தேர்வகள் அமர்ந்து படிக்கின்றனர்.
மேலும் அருகில் உள்ள அரசு துறை அலுவலகங்களுக்கு செல்லும் இடங்களில் அமர்ந்து படிப்பதால் பிற துறைகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ரமாபிரபா கலெக்டர் ஷஜீவனாவிடம், ‘ வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இடப்பற்றாக்குறை நிலவுவதால் போட்டித்தேர்வர்கள் சிரமம் இன்றி படிக்கவும், பயிற்றுநர்கள் பயிற்சி வகுப்புகளை தங்குதடையின்றி நடத்தவும் மதுரை ரோட்டில் உள்ள அரசு ஐ.டி.ஐ.,யில் இடம் ஒதுக்கி தர வேண்டும் என கோரிககை கடிதம் வழங்கி உள்ளார்.