ஸ்டூடியோவில் கேமராக்கள் திருட்டு
தேனி: தேனி பொம்மையக்கவுண்டன்பட்டி பாலன் நகரை சேர்ந்தவர் நாகேந்திரன் 42.
இப் பகுதி கட்டடத்தின் முதல் மாடியில் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். கடையில் சுக்குவாடன்பட்டி இந்திரா காலனியை சேர்ந்த ஜெயக்குமார் பணிபுரிகிறார்.
கடையின் ஷட்டர் சாவி இருவரிடமும் உள்ளது. நாகேந்திரன் கடையை பூட்டி வீட்டு ஜன. 30ல் காலை ஜெயக்குமார் கடைக்கு சென்றபோது, ஷட்டர் கதவின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள 2 டிஜிட்டல் கேமராக்கள்,லென்ஸ், பிளாஸ் லைட், சார்ஜர் உள்ளிட்ட பொருட்களை திருடிச்சென்றது தெரிந்தது.
உரிமையாளர் நாகேந்திரன் புகாரில் அல்லிநகரம் எஸ்.ஐ., கண்ணன் விசாரிக்கிறார்.