வசந்த காலத்தை வரவேற்று தபால் தலை கண்காட்சி
தேனி: தேனி கோட்ட தபால்துறை சார்பில், வசந்த காலத்தை வரவேற்கும் விதமாகவும், பூக்கள், தாவரங்களின் அழகை காட்சிப்படுத்தவும், இயற்கையுடன் ஆழமான தொடர்பை வளர்க்க வசந்த விழா நடந்து வருகிறது.
இதனை முன்னிட்டு தேனி தலைமை தபால் நிலையத்தில் வசந்த கால மலர் அலங்காரம், போஸ்டர்கள், செல்பி பதாகைகள், தபால்தலை கண்காட்சி, மலர் கண்காட்சி அமைக்கப்பட்டன. கோட்ட கண்காணிப்பாளர் குமரன் தலைமை வகித்தார். துணை கோட்ட கண்காணிப்பாளர் ராஜேஷ்குமார், தபால் நிலைய அலுவலர் அறிவழகன் முன்னிலை வகித்தனர். பெரியகுளம் தோட்டக்கலை கல்லுாரி ஆராய்ச்சி நிலையத்தின் டீன் ராஜாங்கம் பங்கேற்று, வசந்தகாலத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். தபால் தலைகள், வசந்த காலத்தில் மலரும் பூக்கள்காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர். ஸ்ரீரோஸி வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் பங்கேற்ற கடிதம் எழுதும் போட்டி நடந்தது. ஏற்பாடுகளை எழுத்தர் நாகராஜ் செய்திருந்தார்.