அரசு பஸ் கண்ணாடியை உடைத்து ரகளை செய்த இருவர் கைது
தேனி: தேனி மாவட்டம் வீரபாண்டி- தர்மாபுரி ரோட்டில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்ட கனியேசுதாஸ் 21, தேவசிம்புஸ்வரன் 20, போலீசார் கைது செய்தனர்.
வீரபாண்டி கோட்டூர் காமராஜர் காலனி கண்ணன் 38, கூலித்தொழிலாளி. இவர் தன் உறவினர் டூவீலரில் தர்மாபுரி கோட்டூர் மெயின் ரோட்டில் சென்றார்.
அங்கு கோட்டூரைச் சேர்ந்த கனியேசுதாஸ், தேவசிம்புஸ்வரன் தகராறில் ஈடுபட்டனர்.
அதனை பார்த்த கண்ணன், டூவீலரை நிறுத்தி வேடிக்கை பார்த்தார்.
இதனை கவனித்த கனியேசுதாஸ், கண்ணனை பிடித்துக்கொள்ள தேவசிம்புஸ்வரன் கைகளால் தாக்கி காயப்படுத்தினார்.
மேலும் அந்த வழியாக சென்ற அரசு பஸ்சை மறித்து தடுத்தனர். இதனால் டிரைவர், கண்டக்டர் இறங்கி அவர்களை ஓரமாக நிற்க கூறினர்.
அப்போது கற்களை எடுத்து பஸ் முன்பக்கமுள்ள ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர்.
அவர்கள் அவ்வழியாக வந்த கண்ணனின் மகனையும் தாக்கினர். கண்ணன் புகாரின்படி கனியேசுதாஸ், தேவசிம்புஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.