தேசிய யோகா போட்டி;; மாணவர்கள் தேர்வு
கூடலுார்; மாநில அளவிலான யோகா போட்டி பழநியில் நடந்தது.
தேனி மாவட்டம் சார்பில் யோகா நிபுணர் ராஜேந்திரன், மாவட்ட பயிற்சியாளர் ரவி ராம் தலைமையில் 30 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அதில் 8 முதல் 11 வயது பிரிவில் கூடலுார் ஆர்.எஸ்.கே. நர்சரி பள்ளி மாணவர்கள் சரண்தேவ், ரோஹித் கிருஷ்ணா, தக்சிதா, புகழ் வேந்தன் ஆகியோர் வெற்றி பெற்று தேசிய யோகா போட்டியில் கலந்து கொள்ள தேர்வு பெற்றனர்.
மழலையர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் முத்துப்பிரியன் மாநில அளவில் 6ம் இடமும், சுசின்பிரத்யகன் 8ம் இடமும் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த யோகா ஆசிரியர் ரவி ராமையும் பள்ளி முதல்வர்கள் சகிலா, பாலகார்த்திகா, நிர்வாகிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.