கூட்டுறவுத் துறையில் 18 மலிவு விலை மருந்தகங்கள்
தேனி; மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் 18 மலிவு விலை மருந்தகங்கள் இம்மாத இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாவட்டத்தில் 8 கூட்டுறவு சங்கங்கள், 10 தொழில் முனைவோர் சார்பில் மொத்தம் 18 மலிவு விலை மருந்தகங்கள் அமைக்கப்பட உள்ளது. இவை மாநில அரசின் மானியத்துடன் செயல்பட உள்ளன. இந்த மருந்தகங்களக்கு தேவையான மருந்துகள் சப்ளை செய்வதற்காக தேனி நுகர்பொருள் வாணிப கழக கோடவுனில் மருந்துகள் இருப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தகங்களில் மற்ற மருந்தகங்களை விட 20 சதவீதம் விலை குறைவாக விற்பனை செய்யப்படும். முதற்கட்டமாக குறிப்பிட்ட சில மருந்துகள் மட்டும் விற்பனை செய்யப்பட உள்ளன. இவை இம்மாத இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும் என கூட்டுறவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.