மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
தேனி; அரசு, உதவி பெறும் கல்லுாரிகளில் மூன்றாமாண்டு இளநிலை படிப்பு, பாலிடெக்னிக்கின் முதுநிலை, அரசு ஒதுக்கீட்டில் தொழிற் படிப்பு படிக்கும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்கள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
இவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். விருப்பமுள்ள மாணவர்கள் http://umis.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பிப்.,28 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு கல்லுாரியில் உள்ள உதவித்தொகை ஒருங்கிணைப்பு அலுவலர், கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.