மாநில விளையாட்டு போட்டிகள் துவக்கம்
தேனி : பள்ளிக்கல்வித்துறை சார்பில் குடியரசு தினவிழா விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் 14 வயதிற்குட்பட்டோருக்கான கால்பந்து, கைப்பந்து, ஹாக்கி, கோ-கோ, எறிபந்து, வாலிபால், கபடி உள்ளிட்ட 12 போட்டிகள் பல்வேறு பள்ளிகளில் நேற்று துவங்கியது.
மாவட்ட விளையாட்டு அரங்கில் கலெக்டர் ஷஜீவனா துவக்கி வைத்தார். சி.இ.ஓ., இந்திராணி, டி.இ.ஓ., வசந்தா, முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் குபேந்திரன், எம்.எல்.ஏ.,க்கள் மகாராஜன், சரவணக்குமார் பங்கேற்றனர். 40 அணிகளைச் சேர்ந்த 5172 மாணவிகள் ஆசிரியர்களுடன் போட்டிகளில் பங்கேற்றனர். போட்டி பிப்.,11 வரை நடக்கிறது.