Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

காணாமல் போன பள்ளி மாணவர்கள் கோவையில் மீட்பு

பெரியகுளம்: பெரியகுளத்தில் காணாமல் போன 7ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் ஜெயன், மதுசூதனன் ஆகியோரை கோவையில் போலீசார் மீட்டனர்.

பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி ஈஸ்வரன் கோயில் தெருவைச் சேர்ந்த ராஜ்குமார் மகன் ஜெயன் 13. அதே பகுதியைச் சேர்ந்த இவரது உறவினர் சுரேஷ் மகன் மதுசூதனன் 13. இருவரும் அதே பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 7 ம் வகுப்பு படித்து வந்தனர். இருவரும் சரியாக படிக்கவில்லை என பெற்றோர் கண்டித்துள்ளனர்.

இதனால் இருவரும் கோபித்துக்கொண்டு கோவை புறப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு மகன்களை காணவில்லை என தென்கரை போலீசில் புகார் அளித்தனர்.

மாணவர்களின் நண்பர் ஒருவர் இருவரும் கோவை செல்வதை உறுதி செய்தனர். எஸ்.ஐ., கர்ணன், கோவையில் தனது போலீஸ் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார். இருவரது படங்களும் அனுப்பி வைக்கப்பட்டது.

கோவை காந்திபுரம் பகுதியில் எஸ்.ஐ., கர்ணன் மாணவர்களை மீட்டு நேற்று மதியம் மாணவர்களை அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். தென்கரை இன்ஸ்பெக்டர் முத்துபிரேம் சந்த், எஸ்.ஐ., கர்ணனை பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *