காட்டுத் தீயை தடுக்க கண்காணிப்பு
போடி: போடி அருகே குரங்கணி, கொட்டக்குடி, வடக்குமலை, முந்தல் உள்ளிட்ட வனப்பகுதியில் எதிர்பாராமல் ஏற்படும் காட்டுத் தீ பரவுவதை தடுக்க விழிப்புணர்வு முகாம் ரேஞ்சர் நாகராஜ் தலைமையில் நடந்தது.
வனவர்கள் கனிவர்மன், பிரகாஷ் முன்னிலை வகித்தனர். வனப்பகுதியில் தீ வைப்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், காட்டுத் தீ பரவும் இடங்களை ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என ரேஞ்சர் பேசினார். பணியாளர்கள் தீ தடுப்பு விழிப்புணர்வு குறித்த பிரசுரங்களை விவசாயிகள், பொது மக்களுக்கு வழங்கினர்.