அரசு ஊழியர்கள் 24 மணி நேர தர்ணா போராட்டம்
தேனி: தேனி பங்களாமேட்டில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், அரசு விடுமுறை நாட்களிலும், பணி நேரத்திற்கு பின்பும் நடத்தப்பட்டு வரும் ஆய்வுக் கூட்டங்களை தவிர்த்திட வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என 24 மணிநேர தர்ணா போராட்டம் நேற்று துவங்கியது. மாவட்டத் தலைவர் தாஜூதின்தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் ரவிக்குமார் வரவேற்றார்.
இந்திய தொழிற்சங்க மையத்தின் மாவட்டத் தலைவர் ஜெயபாண்டி, மாவட்டச் செயலாளர் முத்துக்குமார் பேசினார்.
பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் அழகுராஜூ, சுந்தரம், முத்துப்பாண்டியன், துரைராஜ், முத்துமாரி, மோகன், சரவணன், ராம்குமார், மனோகரன், ஜானகி, நாகராஜ், பெத்தணக்குமார், கோவலன், இராமலிங்கம், முருகேசன், மலர்விழி, தாமோதரன், பவானி, மோகன்குமார், சிவக்குமார், ஜெரால்டு, மீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாநிலச் செயலாளர் நீதிராஜா நிறைவுரை ஆற்றினார்.
மாவட்டப் பொருளாளர் நாகராஜன் நன்றி தெரிவித்தார். தர்ணாபோராட்டம் தொடர்ந்து இன்று காலை 10:00 மணி வரை நடக்கிறது.