டூவீலர் திருட்டு
தேனி, பிப்.13: தேனி அருகே டொம்புச்சேரி பிசி காலனியில் குடியிருப்பவர் சேதுராம் மகன் சுருளிச்சாமி(22). விவசாயி. கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக புதியதாக ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கினார். இந்த டூவீலரை இரவு நேரத்தில் வீட்டின் வளாகத்தில் உள்ள மாட்டு கொட்டகையில் நிறுத்திவைப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த 10ம் தேதி இரவு வீட்டின் மாட்டு கொட்டகையில் நிறுத்தி விட்டு நேற்று முன்தினம் காலை எழுந்து பார்த்தபோது டூவீலர் திருடுபோனது தெரியவந்தது. இது குறித்து அவர் அளித்த புகாரின்பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.