அஞ்சலகங்களில் ஆதார் சேவை: பயன்படுத்த அழைப்பு
தேனி: ஆதார் புதுப்பித்தல்,திருத்த பணிகளுக்கு அஞ்சலகங்களை பயன்படுத்திக்கொள்ளுமாறு தேனி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் குமரன் தெரிவித்துள்ளார்.
அவர் அறிக்கையில் கூறி உள்ளதாவது: ஆதாரில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம், அலைபேசி எண் இணைத்தல், புதிதாக பதிவு செய்தல் உள்ளிட்ட சேவைகள் மாவட்டத்தில் 26 துணை அஞ்சலகங்களில் வழங்கப்படுகிறது. இந்த அஞ்சலகங்களில் இச்சேவை காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை செயல்படும். பெரியகுளம், போடி தலைமை அஞ்சலகங்கள், தேனி துணை அஞ்சலகத்தில் காலை 9:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை இந்த சேவை வழங்கப்படும். பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.