முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
தேனி: மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை அ.தி.மு.க., அ.ம.மு.க., அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் பல்வேறு இடங்களில் அவரது உருவ படத்திற்கு மரியாதை செய்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
அ.தி.மு.க., சார்பில் தேனி நேரு சிலை அருகே நடந்த விழாவிற்கு நகர செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். துணை செயலாளர் சுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தார்.
நிர்வாகிகள் முருகேசன், முத்துகிருஷ்ணன், தினேஷ்குமார், லட்சுமி, பாக்கியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் பங்களாமேட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் கருப்பு தலைமை வகித்தார்.
மாவட்ட துணை செயலாளர் முருகேசன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் நடேசன், பெரியகுளம் தொகுதி செயலாளர் கார்த்திகேயன் பங்கேற்றனர்.
அ.ம.மு.க., சார்பில் ஆண்டிபட்டியில் வடக்கு மாவட்ட செயலாளர் காசிமாயன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் கதிர்காமு, குருபிரசாத், ரவிக்குமார் பங்கேற்றனர்.
ஆண்டிபட்டி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா அ.தி.மு.க., சார்பில் நடந்தது.
ஒன்றிய செயலாளர்கள் லோகிராஜன், வரதராஜன், நகர் செயலாளர் அருண்மதிகணேசன் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க., வினர் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்தனர். அங்கு வைக்கப்பட்ட ஜெ., உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். தொண்டர்கள், பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
பாப்பம்மாள்புரத்தில் நகர ஜெ., பேரவை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் நகர பேரவை தலைவர் பாலமுருகன், ஒன்றிய நகர அ.தி.மு.க., மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பெரியகுளம்:- அ.தி.மு.க., சார்பில் பழைய பஸ்ஸ்டாண்ட்டில் முன்னாள் முதல்வர் ஜெ., படத்திற்கு நகர செயலாளர் பழனியப்பன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. மாவட்ட இணை செயலாளர் முத்துலட்சுமி, நிர்வாகிகள் வெங்கடேஷ், முகமது சலீம், முபாரக் அலி உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பெரியகுளம் ரவீந்திரநாத் முன்னாள் எம்.பி., அலுவலகத்தில் அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் நகர செயலாளர் அப்துல்சமது தலைமையில், ஜெ., படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.
மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் சந்திரசேகரன், ஒன்றிய செயலாளர்கள் செல்லமுத்து, ஆண்டி, கவுன்சிலர் சண்முகசுந்தரம், நிர்வாகிகள் மஞ்சுளா, ராதா, ஜெயபிரகாஷ், பன்னீர் செல்வம், பாலசுந்தரம், முகமது அலி ஜின்னா அன்பு, ராஜகோபால், சிவக்குமார், காமராஜ் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.