Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

ஆண்டிபட்டி அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

ஆண்டிபட்டி, பிப். 18: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் டி.ராஜகோபாலன்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பெட்டிக் கடையில் சோதனை செய்தபோது அரசால் தடை செய்யப்பட்ட 1 கிலோ 225 கிராம் அளவுள்ள புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து பெட்டிக்கடை உரிமையாளரான ராமகிருஷ்ணன் (50) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் புகையிலைப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *