பெண்ணுடன் தகராறு வாலிபர் கைது
தேனி, பிப். 19: தேனி அல்லிநகரத்தில், பெண்ணிடம் தகராறில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். தேனி அல்லிநகரம், அம்பேத்கர் தெற்குத் தெருவில் குடியிருப்பவர் செந்தில்குமார். இவரது மனைவி பாரதி(43). இவர் இப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். கடந்த 14ம் தேதி, இவரது டீக்கடைக்கு வெங்கலாநகரைச் சேர்ந்த தங்கராஜா(31) என்பவர் டீக்குடிக்க வந்துள்ளார்.
டீ குடித்து விட்டு நீண்டநேரமாக கடையில் அமர்ந்திருந்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பாரதியை தங்கராஜா தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தங்கராஜாவைக் கைது செய்தனர்.