சட்டமன்ற மதிப்பீட்டுக் குழுவினர் இன்று தேனி வருகை
தேனி, பிப். 19: தேனி மாவட்டத்திற்கு சட்டமன்ற மதிப்பீட்டுக்குழுவினர் இன்று ஆய்வுக்காக வருகின்றனர். தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு தலைவர் காந்திராஜன் தலைமையில், குழுவின் எம்எல்ஏக்கள், சட்டமன்ற பேரவை செயலக அலுவலர்களுடன் கூடிய குழுவினர் இன்று தேனி மாவட்டத்திற்கு ஆய்வுக்காக வருகின்றனர்.
இக்குவினர், வேளா ண்மை மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கூட்டுறவுத் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறை முகங்கள் துறை, சிறைச்சாலை மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, இந்து சமய அறநிலையத்துறை, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை இயற்கை வளங்கல் துறை ஆகிய துறைகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், அதற்காக ஒதுக்கப்பட்ட தொகை, திட்டத்தின் காலவரையறை, அதன் பயன், திட்ட செயல்முறை வளர்ச்சி மற்றும் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.