மணல் திருட்டு: 3 பேர் கைது
கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு எஸ்.ஐ.பிரேம் ஆனந்த் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். முத்தாலம்பாறையில் இருந்து கருப்பையாபுரம் செல்லும் சில்லி முல்லி ஓடையில் அரசு அனுமதி இன்றி மண் அள்ளும் இயந்திரம் மூலம் இரு டிராக்டரில் மணல் அள்ளிச் சென்றனர்.
விசாரணையில் மணல் திருட்டில் ஈடுட்டவர்கள் தொப்பையாபுரத்தைச் சேர்ந்த சுரேந்தர் 21, கருப்பையாபுரத்தைச் சேர்ந்த பாலசந்திரன் 36, முத்தாலம்பாறையை சேர்ந்த மணிகண்டன் 40, ஆகியோரை கைது செய்த போலீசார் மணல் அள்ளிய இயந்திரம், இரு டிராக்டர்களை பறிமுதல் செய்தனர்.