ஆட்டோ டிரைவர் தற்கொலை
தேனி: முத்துத்தேவன்பட்டி அய்யப்பன் கோயில் தெரு ஆட்டோ டிரைவர் விமல்ராஜ் 40. இவரது மனைவி மல்லிகா 27. கணவர் மது குடிக்கும் பழக்கம் இருந்ததால், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. ஜன.26ல் தகராறு ஏற்பட்டதால் மனைவி கோபித்துக் கொண்டு கண்டமனுாரில் உள்ள தனது பெரியம்மா வீட்டில் தங்கியிருந்தார். கணவர் முத்துத்தேவன்பட்டியில் இருந்தார்.
பிப். 20ல் இரவு வீட்டுக்கடன் செலுத்தாமல் இருந்ததால் நிதி நிறுவனத்தின் சார்பில் கடனை செலுத்த வலியுறுத்திச் சென்றனர். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டது.
பிப்.21ல் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.