கோயில்களில் உண்டியல் திருட்டு
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே சில்க்வார்பட்டியில் உள்ள வீர அழகம்மாள் கோயிலில் இரு நாட்களுக்கு முன் இரவில் பூட்டை உடைத்து கோயிலுக்குள் இருந்த உண்டியலை மரம் நபர்கள் தூக்கிச் சென்றனர்.
நேற்று முன் தினம் இரவிலும் இப்பகுதியில் உள்ள காளியம்மன் கோயிலிலும் பூட்டை உடைத்து உண்டியலை தூக்கி சென்று விட்டனர்.
ஊருக்கு அப்பால் ஒதுக்குப்புறமாக உள்ள சின்னச்சாமி கோயில் அருகே திருடிய உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூபாய் நோட்டுக்களை எடுத்துக் கொண்டு சில்லறை காசுகளை அங்கேயே விட்டுச் சென்றுள்ளனர்.
சம்பவம் குறித்து சில்க்குவார்பட்டி பொதுமக்கள் புகாரில் ஆண்டிபட்டி போலீசார் மோப்பநாய் உதவியுடன் கோயில்களில் உண்டியல்களை தூக்கிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.
ஒரே ஊரில் அடுத்தடுத்த நாட்களில் நடந்த உண்டியல் திருட்டு அப்பகுதியில் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.