அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளைகள்
வருசநாடு, பிப். 23: கடமலை மயிலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கடமலைக்குண்டு, தங்கம்மாள்புரம், குமணன்தொழு, சிறப்பாறை, மூலக்கடை, பகுதியில் 100க்கும் மேற்பட்ட செங்கல் சூளை காளவாசல் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த பகுதியில் அரசு அனுமதியின்றி சில செங்கல் சூளைகளும் இயங்கி வருவதாக புகார் எழுந்துள்ளது. இது சம்பந்தமாக தேனி மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை நடவடிக்கை எடுத்து கனிம வளங்களை பாதுகாக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.