வேளாண் கல்லுாரி மாணவர்களுக்கு திசு வாழை வளர்ப்பு பயிற்சி
உத்தமபாளையம்: பொள்ளாச்சி வாணவராயர் வேளாண் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவர்கள் திசு வாழை வளர்ப்பு குறித்து உத்தமபாளையத்தில் பயிற்சி பெற்றனர்.
பொள்ளாச்சி வாணவராயர் வேளாண் கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவர்கள் அமர்நாத், பிரனஷ், தர்ஷன், ராம்குமார், ஜெகத்ரட்சகன், சர்வேஷ், கவின், விஜய் கார்த்திக், மோகன்ராம் ஆகியோர் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ் நேரடி கள பயிற்சி பெற தேனி வந்துள்ளானர்.
இவர்கள் தேனி வாஹின் ஹோம் மேட் புட் புராடக்ட்ஸ் என்ற நிறுவனத்தில் அதன் தொழில்நுட்பம் குறித்து பயிற்சி பெற்றனர்.
பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு நிறுவனம் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தேனி மாவட்டத்தில் வாழை பிரதான சாகுபடி செய்யப்படுகிறது.
எனவே தேனி பனானா டிரேடிங் நிறுவனத்தில் திசு வாழை வளர்ப்பு முறை மற்றும் அதன் சிறப்பு பற்றியும் அந்நிறுவன தொழில்நுட்பர்களிடம் விளக்கம் கேட்டு குறிப்பெடுத்தனர்.
பின்னர் உத்தமபாளையம் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் விவசாயகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முறைகள் பற்றி பயிற்சி பெற்றனர். இப் பயிற்சியின் போது மாணவர்களுடன் கல்லூரி முதல்வர் பிரபாகர், குழு ஒருங்கிணைப்பாளர்கள், உதவி பேராசிரியர்கள் ஹரிபிரசாத் செந்தில்நாதன், ஆசிரியர்கள் ஆனந்த், சங்கரி ஆகியோர் பங்கேற்றனர்.