மகா சிவராத்திரியை யொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு
போடி, பிப். 28: போடியில் மாசி சிவராத்திரி முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்து மக்கள் வழிபட்டனர். போடி அருகே குரங்கணி சாலையில் உள்ள பீச்சாங்கரை அருகில் மிகவும் பழமை வாய்ந்த கீழ சொக்கையா மற்றும் மேல சொக்கையா கோயில்கள் உள்ளது. இந்த கோயிலில் அம்மாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் மிக சிறப்பாக கொண்டாடப்படும். மேலும் இந்த கோயிலில், நாள் முழுவதும் அன்னதானமும் நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று முன் தினம் நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு பொதுமக்கள் அவரவர் குல தெய்வங்களுக்கு சென்று விரதமிருந்து வழிபட்டு வணங்கி வந்தனர். அந்த வகையில் மேல, கீழ சொக்கையா கோயிலுக்கு அதிகளவு திரண்டு சென்று சிவபெருமானை வழிபட்டனர். குறிப்பாக போடி காசி விஸ்வநாதர் கோயில், கொட்டகுடி அணைப்பிள்ளையார் கோயில், தீர்த்த தொட்டி முருகன் கோயில், வினோபாஜி காலனி சுந் தரேஸ்வரர் கோயில், போடி குப் பிநாயக்கன்பட்டி குண்டாலீஸ்வரி கோயில் மற்றும் பல்வேறு இடங்களில் வழிபட்டனர்.