பள்ளி ஆசிரியைக்கு டார்ச்சர் கூலித் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை
தேனி, பிப். 28:ஆண்டிபட்டி அருகே உள்ள 35 வயது பெண், தனியார் ஆங்கிலப் பள்ளியொன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவரை கடந்த 2019ம் ஆண்டு, தோட்டங்களுக்கு மருந்து தெளிக்கும் பணி செய்து வரும் ராஜ்குமார்(42) என்பவர் பாலியல் வன்கொடுமை செய்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட அப்பெண் அளித்த புகாரின்பேரில் க.விலக்கு போலீசார் ராஜ்குமார் மீது வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை தேனி மாவட்ட பிசிஆர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அனுராதா முன்னிலையில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் இசக்கிவேல் ஆஜரானார். வழக்கு விசாரணை முடிந்ததையடுத்து, நீதிபதி அனுராதா நேற்று தீர்ப்பளித்தார். தீர்ப்பில் குற்றம்சாட்டப்பட்ட ராஜ்குமார் குற்றவாளி என தீர்மானித்து, அவருக்கு 5 ஆண்டுகள் தண்டனையும் ரூ. 7 ஆயிரம் அபராதமும், அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக ஒரு ஆண்டு காலம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.