கூலித் தொழிலாளியிடம் ரூ.40 ஆயிரம் திருட்டு
தேனி, : தேனி பஸ் ஸ்டாண்டில் கூலித்தொழிலாளியிடம் ரூ.40 ஆயிரம் திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி குப்பிநாயக்கன்பட்டி கிழக்கு தெரு கூலித்தொழிலாளி மச்சக்காளை 52. இவரது அண்ணன் திண்டுக்கல் மாவட்டம் எரியோட்டில் இறந்தார். மச்சக்காளை மகளுடன் வீட்டில் இருந்து எரியோட்டிற்கு புறப்பட்டார். அப்போது பணம் ரூ.40 ஆயிரம் எடுத்துச் சென்றார். தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்டில் திருச்சி செல்லும் பஸ்சில் ஏறினார். டிக்கெட் எடுத்த போது பணம் திருடு போனது தெரிந்தது. தொடர்ந்து துக்க நிகழ்விற்கு சென்று திரும்பியவர் அளித்த புகாரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.