இடத்தை ஆக்கிரமித்து மிரட்டல்; வி.சி.க நிர்வாகி கைது
பெரியகுளம் : பெரியகுளத்தில் இருவரது வீட்டடி மனைகளை ஆக்கிரமித்து, பணம் கேட்டு மிரட்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பாலமுருகன் கைது செய்யப்பட்டார்
தேனிமாவட்டம் பெரியகுளம் தென்கரை தெற்குபுதுத் தெரு தாமரைச்செல்வம் மனைவி சண்முகபிரியா 30. இதே பகுதி சங்கர் சந்தைச் சேர்ந்தவர் சண்முகம் 65. இருவரும் பாரதிநகர் பகுதியில் வெவ்வேறு சர்வே எண்களில் வீட்டடி மனைகள் வாங்கினர்.
பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி நேருஜி தெரு வி.சி., கட்சி மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பாலமுருகன் 49. இவர், மேற்கூறிய இருவரது இடங்களிலும் தனக்கு பங்கு உள்ளது என வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்தார்.
‘பிரச்னை செய்யாமல் இருப்பதற்கு இருவரும் தலா ரூ.50 ஆயிரம் கொடுக்க வேண்டும்’ என கொலை மிரட்டல் விடுத்தார். பாலமுருகனை ,தென்கரை இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த் கைது செய்தார்.-