காமாட்சியம்மன் கோயில் ரோட்டில் இடிபாடுகள்
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டியிலிருந்து 3 கி.மீ., தூரத்தில் மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் உள்ளது.
தமிழகத்தில் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோயிலிலிருந்து ஒரு கி.மீ., தூரம் ரோட்டின் இடதுபுறம் 200 மீட்டர் தூரத்திற்கு கட்டட இடிபாடுகள், கிணறு வெட்டிய மண் கொட்டி பல நாட்களாக இடையூறாக உள்ளது.
இதனால் வாகனங்கள் செல்வதற்கு சிரமமாக உள்ளது.
விபத்திற்குள்ளாகும் அபாயம் உள்ளது. தேவதானப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் ரோட்டோரம் மண்ணை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.