பாரம்பரிய பர்மா கருப்புக் கவுனி நெல் சாகுபடியில் அசத்தும் விவசாயி
தேனி :மாவட்டத்தில் பாரம்பரிய நெற்பயிரான பர்மா கருப்புக் கவுனி சாகுபடியில் ஆறடி வளர்த்து அறுவடைக்கு தயாராகி உள்ளது.
தேனி அருகே பாலார்பட்டி விவசாயி குணசேகரன். இவர் 4 ஏக்கர் நிலம் குத்தகைக்கு வாங்கி அதில் பர்மா கருப்புக்கவுனி என்ற பாரம்பரிய நெல் நடவு செய்தார்.
15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை இயற்கையிலான நுண்ணுாட்டச்சத்துக்களை இட்டு பராமரித்து வருகிறார்.
அதன் பயனாக தற்போது பர்மா கருப்புக்கவுனி நெற்கதிர்கள் ஆறடி உயரம் வளர்ந்து ஏப்ரலில் அறுவடைக்கு தயாராகி வருகிறது.
விவசாயி குணசேகரன் கூறுகையில், இந்த நெற் பயிர் 140 நாட்கள் வளரகூடியது. நெல் கிலோ ரூ.300க்கு விற்பனையாகிறது.வேளாண் துறையால் வழங்கப்படும் சாதாரண நெல் ஏக்கருக்கு 35 மூடை மகசூல் எடுக்கலாம். இதில் ஒரு ஏக்கருக்கு ரூ.25 மூடைகள் கிடைத்தாலும் கனிசமான லாபம் உள்ளது. மண் வளமும் கெடாது என்பதால் என்னை பார்த்து எங்களில் ஊரில் பல விவசாயிகள் பாரம்பரிய நெல் சாகுபடிக்கு மாறியுள்ளனர்’, என்றார்.