பெரியகுளத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் தபால் நிலையம் அலுவலகம் முன் தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பு தென் மண்டல செயலாளர் முத்துராமலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய முப்பெரும் சட்டங்களின் பிரிவுகளின் திருத்தங்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என கோஷமிட்டனர்.
வழக்கறிஞர்கள் செல்வன், வடிவேல், ராமகிருஷ்ணன், மாறன், பூமிராஜன், அருண் தவசி உட்பட பலர் பங்கேற்றனர்.