Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

அதிக சத்தத்துடன் பாடல் ஒலிபரப்பு: மாணவர்கள் சிரமம்

போடி; பிளஸ் 2 , பிளஸ் 1 மாணவர்களுக்கு அரசு பொதுத் தேர்வு நடந்து வரும் நிலையில் போடி பகுதியில் அதிக ஒலியில் பாடல்கள் ஒலி பரப்புவதால் மாணவர்கள் படிக்க முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர்.

போடி நகர், கிராம பகுதியில் கோயில் கும்பாபிஷேகம், கோயில் திருவிழா, திருமணம், காதுகுத்து, வசந்த விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதற்காக ஸ்பீக்கர், கூம்பு வடிவ குழாய் மூலம் அதிக ஒலியில் ஒலிபரப்பி வருகின்றனர்.

கோயில் திருவிழாவில் கோயில் வளாகத்திற்குள் கச்சேரிகள் ஏற்பாடு செய்தால் பக்தி பாடல்களை மட்டுமே பாட அனுமதிக்க வேண்டும். சினிமா பாடல் பாட கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கோர்ட் உத்தரவை மீறி கோயில் விழாக்களில் டூயட் கலந்த சினிமா பாடல்களை அதிக சத்தத்துடன் ஒலிபரப்பி வருகின்றனர்.

தற்போது பிளஸ்2, பிளஸ் 1 மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இந்நிலையில் அதிக சத்தத்துடன் பாடல்கள் ஒலிபரப்புவதால் மாணவர்கள் படிப்பதில் கவனம் செலுத்த முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர்.

தேர்வு நாட்களில் அதிக சத்தத்துடனும் கூம்பு வடிவ குழாய் மூலம் பாடல்கள் ஒலிபரப்புவதை தடை செய்வதோடு, குறிப்பிட்ட நேரத்தில் குறைந்த சத்தத்துடன் பாடல்கள் ஒலிபரப்ப போலீசார் நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் வலியுறுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *