Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

நலம் மருத்துவமனையில் அதிநவீன அவசர சிகிச்சை பிரிவு துவக்கம்

தேனி: தேனி நலம் பல்நோக்கு மருத்துவமனையின் விரிவுபடுத்தப்பட்ட அதிநவீன அவசர சிகிச்சைப் பிரிவின் துவக்க விழா நேற்று நடந்தது.

தேனி எஸ்.பி., சிவபிரசாத் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். குழந்தைகள் சிறுநீரகவியல் சிகிச்சை பிரிவின் டாக்டர் அர்பிதா, மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ராஜ்குமார், பாலசங்கா குழும நிர்வாக இயக்குனர் கதிரேசன், தேனி கூடுதல் எஸ்.பி., கேல்கர்சுப்ரமண்ய பாலசந்ரா, அவரது மனைவி காயத்ரி, பாலசங்கா குழும நிர்வாகியின் குடும்பத்தினர், கே.எம்.சி., குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் முத்துகோவிந்தன், ஜி.பி.எம்., குழும நிர்வாக இயக்குனர் சன்னாசி, ஏ.சி.வி., மில் நிர்வாக இயக்குனர் சந்திரசேகர், மருத்துவமனை மருத்துவ ஆலோசகர்மயக்கவியல்துறை டாக்டர் பிரபாகரன், ஒப்பந்ததாரர் பாண்டியராஜன், கம்பம் பள்ளத்தாக்கு இந்திய மருத்துவ கழகத்தின் நிர்வாகிகள், டாக்டர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், சன் பெஸ்ட் நிறுவன ஊழியர்கள் பங்கேற்றனர்.மருத்துவமனை நிர்வாக இயக்குனர் கூறியதாவது:

‘மாவட்டத்தில் முதல் முறையாக நெகட்டிவ் பிரசர் அறை வசதி கூடுதலாக உள்ள அதிநவீன அவசர சிகிச்சைப் பிரிவு துவக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில் நுரையீரல் பாதிப்பு அடைந்தவர்களிடம் இருந்து, வேறு இதய பாதிப்படைந்தவர்களுக்கு பரவும் தொற்று தடுக்கப்படுவதால், பாதுகாப்பான சிகிச்சையை உறுதிப்படுத்த நெகட்டிவ் அறை துவக்கப்பட்டுள்ளது. இந்த அறையின் உள்ளே வரும் காற்று, தொடர்ந்து வெளியேற்றப்படுவதாலும், புதிய காற்று தொடர்ந்து உள்ளே வரும் தொழில்நுட்பம் உள்ளது.நுரையீரல் தொற்று, பிற பாதிப்படைந்து சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு பரவ வாய்ப்பில்லை. இதில் பொதுமக்களுக்கு அதிக பயன் கிடைக்கும்.’, என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *