Saturday, June 7, 2025
மாவட்ட செய்திகள்

இலவச தையல் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

தேனி: கனராவங்கி ஊரக சுயவேலைவாய்ப்புபயிற்சி மையத்தில் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி மார்ச் 26 முதல் மே 5 வரை நடக்கிறது.

இப்பயிற்சியில் கிராமப்புறத்தை சேர்ந்த 18 வயது நிரம்பிய பெண்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடைபெறும். உணவு, தங்குமிடம் இலவசம். பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு வங்கி கடன் ஆலோசனை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஆதார் நகல், புகைப்படத்துடன் தேனி கருவேல் நாயக்கன்பட்டி தொழிலாளர் நலவாரிய அலுவலகம் அருகே உள்ள கனரா வங்கி சுயதொழில் வேலைவாய்ப்பு மையத்தை நேரில் அணுகலாம். அல்லது 95003 14193 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மைய இயக்குநர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *