கல்லுாரிகளுக்கான ஸ்கேட்டிங் போட்டி உத்தமபாளையம் கல்லுாரி சாதனை
உத்தமபாளையம்: மதுரை காமராஜ் பல்கலை கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டிகளில் உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரி மாணவ, மாணவிகள் சாதனை படைத்தனர்.
சிவகங்கையில் மதுரை காமராஜ் பல்கலை. கல்லூரிகளுக்கு இடையேயான ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது.
தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இதில் உத்தமபாளையம் கல்லூரி மாணவர் விமல் ஆயிரம் மீ., ரிங் ரேஸ் போட்டியில் முதல் இடத்தையும், 10 ஆயிரம் மீ., மற்றும் லேப் ரோடு ரேஸ் போட்டியில் 3ம் இடத்தையும் பெற்றார். சஞ்சித் கண்ணா 10 ஆயிரம் மீ.,ரிங் ரேஸ் போட்டியில் முதலிடத்தையும், 500 மீ.,ரிங் ரேஸ் , 10 ஆயிரம் மீ., லேப் ரோடு ரேஸ் போட்டியில் இரண்டாம் இடம்
பெற்றார். கவின் பிரசாத் லேப் ரோடு ரேஸ் போட்டியில் முதலிடம் பெற்றார்.
மாணவி ப்ரித்திகா பெண்களுக்கான 10 ஆயிரம் மீ., ரிங் ரேஸ் போட்டியில் முதலிடத்தையும், ஆயிரம் மீ.,ரிங் ரேஸ், மற்றும் லேப் ரோடு ரேஸ் போட்டிகளில் 2ம் இடத்தையும், ஆயிரம் மீ., ரோடு ரேஸ் போட்டியில் 3ம் இடத்தையும் பெற்றார். யோகிதா 10 ஆயிரம் மீ., ரிங் ரேஸ் மற்றும் ரோடு ரேஸ் போட்டிகளில் 2ம்இடம் மற்றும் லேப் ரோடு ரேஸ் போட்டியில் 3 ம் இடமும் பெற்றார்.
அதிக பதக்கங்களை பெற்று சாதனை படைத்த மாணவ மாணவிகளை தாளாளர் தர்வேஷ் முகைதீன், ஆட்சி மன்ற குழு தலைவர் முகமது மீரான், முதல்வர் எச்.முகமது மீரான் ஆகியோர் பாராட்டினர்.
பயிற்சியளித்த உடற்கல்வி இயக்குநர் அக்பர் அலியும் கவுரவிக்கப்பட்டார்.