ஆடுகளை ஆட்டைய போட்ட மர்ம நபர்கள்
போடி, மார்ச் 21: தேனி மாவட்டம் போடி அருகே சின்னமனூர் ஒன்றியம் சங்கராபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் அசோக்(32). இவர் கொட்டம் அமைத்து ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 18ம் தேதி இரவு ஆடுகளை கொட்டத்தில் அடைத்து பூட்டிவிட்டு தூங்கச் சென்றார்.மீண்டும் மறுநாள் (19ம் தேதி)காலையில் பார்த்த போது கொட்டத்தின் கதவு திறந்து கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது 2 ஆடுகள் காணாமல் போயிருந்தது. இரவில் மர்மநபர்கள் பூட்டை உடைத்து கொட்டத்திற்குள் புகுந்து ஆடுகளை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.