தேனி பஸ் ஸ்டாண்டில் ஆட்டோக்கள் ஆக்கிரமிப்பு
தேனி: தேனி பழைய பஸ் ஸ்டாண்டை ஆட்டோக்கள் ஆக்கிரமிப்பு அதிகரித்ததால் பஸ்சிற்கு காத்திருக்கும் பயணிகள் அவதியடைகின்றனர்.
தேனி பழைய பஸ் ஸ்டாண்டில் நகராட்சி சார்பில் ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்து வருகிறது. அதே நேரம் கம்பம் ரோட்டில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் பழைய பாலத்தை இடித்து புதிய பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் சில ஆட்டோக்கள் பயணிகள் பஸ்சிற்கு காத்திருக்கும் பகுதியில் ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பஸ்சில் இருந்து இறங்கவும், பஸ்சில் ஏறவும் பயணிகள் அவதிப்படுகின்றனர். பஸ் ஸ்டாண்டில் பல இடங்களில் டூவீலர்களும் இடையூறாக நிறுத்தப்பட்டுள்ளன. பயணிகளுக்கு இடையூறு ஏற்படாதவாறு பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.