போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் தேனி மாவட்டமதுவிலக்கு மற்றும்ஆயத்த தீர்வு துறை சார்பில் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிநடந்தது.
டி.ஆர்.ஓ., மகாலட்சுமி, பேராசிரியர் தனவேல், கல்லூரி முதல்வர்சுஜாதா, கலால் உதவி ஆணையர் கதிர்வேல், கலால்அலுவலர் ஜஸ்டின் சாந்தப்பா, ஆண்டிபட்டி உணவு பாதுகாப்பு அலுவலர் ஜனகர் ஜோதிநாதன் உட்பட பலர்பேசினர். ஏற்பாடுகளை கல்லூரியின் போதை தடுப்பு மற்றும் கண்காணிப்பு குழுவினர் செய்திருந்தனர்.