‘விட்டமின் ஏ’ திரவம் வழங்கும் முகாம்
கம்பம்: ஒன்று முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கண் குறைபாட்டை நிவர்த்திக்காக விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் அங்கன்வாடி மற்றும் பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகிறது
விட்டமின் ஏ குறைபாடு இருந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும். அதை தடுக்க மத்திய அரசு கடந்த பல ஆண்டுகளாக ஒன்று முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு விட்டமின் ஏ திரவம் வழங்கும் சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் இம் முகாம் நடைபெறும். அங்கன்வாடிகள், சத்துணவு மையங்கள், ஆரம்ப பள்ளிகளுக்கு சென்று கிராம செவிலியர்கள் இந்த விட்டமின் ஏ திரவத்தை வழங்குகின்றனர்.
எட்டு ஒன்றியங்களிலும் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், கிராம செவிலியர்கள் விட்டமின் ஏ திரவம் வழங்கி வருகின்றனர். இதன் மூலம் பார்வை குறைபாடு, மாலைக்கண் உள்ளிட்ட கண் நோய்கள் குணமாகும்.