மாற்றுத்திறனாளிகள் அணுகல் தன்மை பயிற்சி
தேனி : தேனி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில்மாற்றுத் திறனாளிகளுக்கான அணுகல் தன்மை குறித்த பயிற்சியை கலெக்டர் ரஞ்ஜீத்சிங் துவக்கி வைத்தார்.டி.ஆர்.ஓ., மகாலட்சுமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் எளிதில் அணுகும் வகையில் நெறிமுறைகள் அளிக்கப்பட்டன.
இதில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி குறித்தும், கோட்ட, வட்டார அளவில் அமையவுள்ள ஒருங்கிணைந்த சேவை மையம் நோக்கம் குறித்து விளக்கப்பட்டது