Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் – தேனி ரயில் பாதை கோரி நடை பயணம் துவக்கம்

தேனி: திண்டுக்கலில் இருந்து தேனிக்கு ரயில் பாதை அமைக்க கோரி திண்டுக்கல் – குமுளி அகல ரயில்பாதை போரட்டக்குழு சார்பில் நடைபயணம் தேனியில் நேற்று துவங்கியது.

திண்டுக்கலில் இருந்து தேனி மாவட்டத்திற்கு ரயில் பாதை அமைக்க கோரி திண்டுக்கல் குமுளி அகல ரயில்பாதை போரட்டக்குழு சார்பில் நடைபயணம் துவங்கப்பட்டது. தேனி பங்களா மேட்டில் நடந்த விழாவில் எம்.பி., தங்கதமிழ்செல்வன் நடைபயணத்தை துவக்கி வைத்தார். விழாவில் போராட்டக்குழு தலைவர் சங்கரநாராயணன், பெரியகுளம் எம்.எல்.ஏ., சரவணக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நடைபயணம் மேற்கொண்டுள்ளவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி திண்டுக்கல் ரயில்வே அதிகாரிகள், திண்டுக்கல் கலெக்டரிடம் மனு அளிக்க உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *