ஜாக்டோ ஜியோ உண்ணாவிரதம்
தேனி,: தேனி பங்களா மேட்டில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,
சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தாஜூதின் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராமசந்திரன் முன்னிலை வகித்தார். ராம்குமார், ராமலிங்கம், சுருளியம்மாள், கிருஷ்ணசாமி, அழகுராஜூ, ரவிக்குமார், சந்திரன், ராமமூர்த்தி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.