மகா கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
கம்பம் சுருளி வேலப்பர் கோயில் பத்தர்களின் அரோகரா கோஷத்திற்கிடையே கலசங்களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கம்பம் சுருளி வேலப்பர் என்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் முருக பக்த சபையினர் சார்பிலஎம்.எல்.ஏ-., என். ராமகிருஷ்ணன் தலைமையில் கோயில் திருப்பணிகள் நடந்தது. ஆக. 19 ல் யாகசாலை பூஜைகள் துவங்கின. 18 யாக குண்டங்களில் சிவாச்சாரியார் ஜவஹர் தலைமையில் யாக வேள்விகள் நடைபெற்றது. நேற்று அதிகாலை 5:45 மணிக்கு சுருளி வேலப்பர் மற்றும் பரிவார தெய்வங்களின் நான்காம் கால யாக வேள்விகள் நடந்தது. ருத்ர ஜெபம், வேத பாராயணத்தை தொடர்ந்து காலை 8:30 மணிக்கு கோ பூஜை துவங்கி வேள்விகள் நடந்தது.
பின் புனித நீர் குடங்கள் கடம் புறப்பாடு செய்து 10:00 மணிக்கு சுருளி வேலப்பர் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுர கலசங்களில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தினர். திரண்டிருந்த பக்தர்களின் ‘அரோகரா’ கோஷம் எழுப்பி வணங்கினர். பின் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. முருக பக்த சபை சார்பில் அன்னதானம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் தங்கதமிழ்செல்வன் எம்.பி., கோயில் தக்கார் அருணா தேவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். திருப்பணி மற்றும் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை முருக பக்த சபை தலைவரும் எம்.எல்.ஏ. வுமான என்.ராமகிருஷ்ணன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கே.ஆர்.ஜெயப் பாண்டியன் , முருகேசன், முருக பக்த சபை உறுப்பினர்கள் எம்.எஸ்.எஸ். காந்தவாசன், கே.கே.டி. கருப்பசாமி, டாக்டர் எம். பாண்டியன், ஓ. ஆர். நாராயணன், பேராசிரியர் கே.எஸ்.கண்ணன், கே. முத்துக் கண்ணு, கே. எஸ். கார்த்திகேயன், எஸ்.கே.எம்.ராமச்சந்திரராசா, எல். முருகன், வாசு முருகன், கே.வி. விஷ்ணுராம், எஸ். மாரியப்பன், டி. எஸ். ஆனந்த், பி. தியாகராசன், எஸ்.பால வேலவன், எஸ். சங்கரன், ஆர்.கே. செல்வக்குமார், ஆர். ரத்தினவேல் பாண்டியன், கோபால், ஏ. சக்திவேல், ஆர்.கே. செல்வக்குமார், என்.கேஎஸ் ரெங்கேஸ்வரன்.கே. சி. செல்வக்குமார் செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் நகராட்சி தலைவர் ராஜாமணி, எம். பி .எம். பள்ளி தாளாளர் மகுட காந்தன், டாக்டர் மோகன சுந்தரம், ஆர்த்தி பேக்கரி எஸ். ராஜேந்திரன், எம்.கே.எஸ். குழும சேர்மன் சந்திரசேகர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.