மூணாறு ஜூம்மா மசூதியில் நோன்பு கஞ்சி விநியோகம்
மூணாறு, மார்ச் 25: கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ளது பிரபல சுற்றுலாத்தலமான மூணாறில் நூற்றாண்டுகளுக்கு முன்பு மூணாறு நகரில் ஜூம்மா மசூதி கட்டப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு நோன்பு காலத்திலும் இங்கு நோன்பு கஞ்சி வழங்கப்பட்டு வருகிறது. ஆரம்ப காலத்தில் மூணாறு பகுதியில் முஸ்லிம் குடும்பங்கள் மிகக் குறைவு. இதனால் மூணாறு அருகே உள்ள பெரும்பாவூர், கோதமங்கலம், மூவாற்றுப்புழா மற்றும் போடி, ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து மூணாறுக்கு வரும் வியாபாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மட்டுமே நோன்பு கஞ்சியை சாப்பிட்டு வந்தனர்.
காலப்போக்கில், மருத்துவ குணம் கொண்ட இந்த நோன்பு கஞ்சி மூணாறில் உள்ள வியாபாரிகள், தோட்டத் தொழிலாளர்கள், மற்றும் சுற்றுலாப் பயணிகளின் விருப்பமாக மாறியது. 120 ஆண்டுகளாக மூணாறு ஜூம்மா மசூதியின் தலைமையில் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஜூம்மா மசூதியின் இமாம் ஆஷிக் மௌலவி, ஜமாத் தலைவர் காதர் குஞ்சு, துணைத் தலைவர் கரீம், பொதுச் செயலர் நசீர் அகமது, முஹம்மது ஷாருன் ஆகியோர் தலைமை வகித்தனர்.