தே.மு.தி.க ., நிர்வாகிகள் கூட்டம்
ஆண்டிபட்டி; ஆண்டிபட்டியில் தே.மு.தி.க., சார்பில் கட்சி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் சக்கம்பட்டியில் உள்ள தனியார் கட்டடத்தில் நடந்தது.
தே.மு.தி.க., சார்பில் ஆண்டிபட்டி, கம்பம் சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய புதிய மாவட்டச் செயலாளராக செல்லத்துரை நியமிக்கப்பட்டு உள்ளார். இதனை தொடர்ந்து மாவட்டச் செயலாளர் நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்று ஆண்டிபட்டியில் எம்.ஜி.ஆர்., முத்துராமலிங்கத் தேவர், திருமலை நாயக்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். சக்கம்பட்டியில் நடந்த அறிமுகக் கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் சரவணன் தலைமை வகித்தார். ஆண்டிபட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் ரத்தினவேல் பாண்டியன், தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சி நிர்வாகிகளுடன் மாவட்ட செயலாளர் ஆலோசனை நடத்தினார். செயற்குழு உறுப்பினர் கொடியரசன், சின்னமனுார் நகரச் செயலாளர் முருகன், மாவட்ட துணைச் செயலாளர் சுப்பையா, ஒன்றிய துணைச் செயலாளர்கள் ரங்கராஜ், முத்துராம், சுப்பிரமணி உட்பட பலர் பங்கேற்றனர்.