வீட்டின் பூட்டை உடைத்து ரூ.52 ஆயிரம் திருட்டு
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே புல்லக்காபட்டி டி.வி. நகரைச் சேர்ந்தவர் காளிமுத்து 65. பொம்மிநாயக்கன்பட்டி பங்காளிகளுக்கு உட்பட்ட சோனை முத்தையா கோயில் பூசாரியாக வரவு, செலவு கவனித்து வந்தார்.
கோயில் பணம் ரூ.52 ஆயிரத்தை வீட்டின் பீரோவில் வைத்துள்ளார். தனது பேரன் காதணி விழாவிற்கு சமயபுரத்திற்கு குடும்பத்துடன் சென்றார். வீடு திரும்பியபோது வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ரூ.52 ஆயிரம் திருடுபோனது. புகாரில் தேவதானப்பட்டி எஸ்.ஐ., வேல் மணிகண்டன் விசாரணை செய்து வருகிறார்.–