மாநில ‘கிக் பாக்சிங்’ போட்டிக்கு 25 பேர் தேர்வு
மாநில கிக் பாக்சிங் போட்டிக்கு தேனி மாவட்டத்திலிருந்து பல்வேறு பிரிவுகளில் 120 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்ட அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி ஏப்ரல் 6ல் தேனி மாவட்ட உள் விளையாட்டு அரங்கில் நடந்தது. தேனி மாவட்ட அமச்சூர் கிக் பாக்சிங் அசோசியேசன் சார்பில் நடந்த போட்டியில் சப் ஜூனியர், ஜூனியர், சீனியர்களுக்கு பல்வேறு எடை பிரிவுகளில் 120 பேர் பங்கேற்றனர்.
இப்போட்டிகளில் வெற்றி பெற்ற 25 பேர் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் மே 9, 10, 11 ஆகிய தேதிகளில் சென்னை மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
மாநில அளவிலான போட்டிக்கு தேர்வான மாணவர்கள், கன்னியப்பபிள்ளைபட்டி பயிற்சி மையத்தில்நடந்த நிகழ்ச்சியில் பாராட்டு பெற்றனர். அமச்சூர் கிக் பாக்சிங் அசோசியேசன் தலைவர் மகாராஜன், செயலாளர் மற்றும் பயிற்சியாளர் துரைமுருகன், துணை பயிற்சியாளர்கள் ஆனந்த வேல்முருகன் ஜெயவேல் மாரிமுத்து ஆகியோர் பாராட்டினர்.