Monday, April 28, 2025
மாவட்ட செய்திகள்

ரேஷன் கடை பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்தம்; பொருட்கள் வினியோகம் முடக்கம்

தேனி மாவட்டத்தில் ரேஷன்கடை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் ரேஷன் பொருட்கள் வினியோகம் முடங்கியது. கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்டத்தில் 403 முழு நேர ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. ரேஷன் கடைகளுக்கு பொட்டலங்களில் பொருட்கள் வழங்க வேண்டும். ரேஷன் வினியோகத்திற்கு தனித்துறை உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றுநாட்களாக ரேஷன்கடை பணியாளர் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் ரேஷன் பொருட்கள் வினியோகம் மாவட்டம் முழுவதும் முடங்கியது. நேற்ற 209 கடைகள் செயல்படவில்லை. வேலை நிறுத்த போராட்டத்தில் 195 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் அருகே மாவட்ட தலைவர் மகாலிங்கம் தலைமையில் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில பொருளாளர் பொன் அமைதி, நிர்வாகிகள் பன்னீர்செல்வம், அழகர்சாமி, அய்யனார், காமாட்சி முருகேசன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *