சித்திரை திருவிழா: 22 தற்காலிக உண்டியல்கள் வைக்க ஏற்பாடு
”வீரபாண்டி சித்திரை திருவிழாவிற்காக 22 தற்காலிக உண்டியல்கள் வைக்க ஏற்பாடு நடந்து வருகின்றன.” என, ஹிந்து சமய அறநிலையத் துறையினர் தெரிவித்தனர்.
வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா மே 6 முதல் மே 13 வரை நடக்க உள்ளது.
கம்பம் நடும் நிகழ்வு முடிந்துள்ளதால் தினமும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தருகின்றனர்.
இந்நிலையில் கோயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக 12 இடங்களில் நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன.
சித்திரை திருவிழாவை முன்னிட்டு மேலும் 22 தற்காலிக உண்டியல்கள் கோயில் வளாகத்தில் வைக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் கூறுகையில், ‘கோயில் பிரகாரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக குச்சிகள் கட்டி தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
எனவே, அங்கப்பிரதட்சண வேண்டுதல் நிறைவேற்றும் பக்தர்கள் மே 3க்குள் கோயில் வளாகத்தில் அங்கபிரதட்சணம் செய்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.