நீர்நிலைகளில் தஞ்சமடையும் பொதுமக்கள்: உள்ளாட்சிகள் சார்பில் கண்காணிப்பு அவசியம்
”நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெப்பத்தை சமாளிக்க பொது மக்கள் ஆறுகள், அருவிகள், கிணறுகளில் பகல் நேரத்தில் குளிப்பதற்கு குவிந்து வருகின்றனர். நீர்நிலைப் பகுதிகளில் அசம்பாவிதங்களை தடுக்க உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.” என, சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் மாலை நேரத்தில் குளுமையான சூழல் நிலவுகிறது.
காலை, மதிய நேரத்தில் அதிக அளவில் வெயில் தாக்கம் உள்ளது. வெப்பத்தை சமாளிக்க முல்லைப் பெரியாற்றில் வீரபாண்டி, பழனிசெட்டிபட்டி, குன்னுார், அரண்மனைப்புதுார் ஆகிய பகுதிகளில் பொது மக்கள் குடும்பத்துடன் குளிக்கின்றனர். சிறுவர்கள் நண்பர்களுடன் குளிக்கின்றனர். இது தவிர சின்னச்சுருளி, பெரியகுளம் கும்பக்கரை அருவிகளுக்கும் அதிகளவில் செல்வது தொடர்கிறது. பொது மக்கள் குளிக்கும் இடங்களில் அசம்பாவிதங்களை தடுக்க, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் கண்காணிப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.